37ஆவது திருமணம் செய்த முதியவர் - 28 மனைவிகள் பங்கேற்பு

 முதியவர் ஒருவர் 37ஆவது திருமணம் செய்து கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஐ.பி.எஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா, துணிச்சலான மனிதர் என்ற வாசகத்துடன் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்தத் திருமணம் எங்கே, எப்போது நடந்தது என்ற தகவல் வெளியாகவில்லை. ஆனால் இந்த திருமணத்தில் 135 பிள்ளைகள், 126 பேரக் குழந்தைகளும் கலந்து கொண்டுள்ளனர். 28 மனைவிகள் தற்போது உயிருடன் உள்ள நிலையில், அவர்கள் முன்பாகவே தனது 37ஆவது திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்