நண்பனின் மனைவியை திருமணம் செய்த நபர் - காரணம் கேட்டா நீங்களே அசந்து போவீங்க..

karnataka manmarriedfriendwife
By Petchi Avudaiappan Feb 08, 2022 06:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கர்நாடகாவில் இறந்த நண்பனின் மனைவியை திருமணம் செய்த நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள முள்ளூர் கிராமத்தை சேர்ந்த சேத்தன்குமார் என்பவருக்கும், ஹனூர் டவுனை சேர்ந்த அம்பிகாவுக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. சேத்தன்குமார் பெங்களூருவில் உள்ள தனியார் ம்ருத்துவமனையில் ஊழியராக வேலை செய்து வந்தார். 

இதனிடையே கொரோனா 2வது அலையின் போது சேத்தன்குமார் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அம்பிகா தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து சேத்தன்குமாரின் நண்பர் லோகேஷ் அம்பிகாவை மீட்டு காப்பாற்றியுள்ளார். 

இந்நிலையில் லோகேஷ் அம்பிகாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்க இருவர் சம்மதத்துடனும், இருவீட்டார் சம்மதத்துடனும் வாழ்த்துக்களுடனும் இனிதே திருமணம் நடைபெற்றது. கொரோனாவுக்கு பலியான நண்பரின் மனைவியை மறுமணம் செய்த லோகேஸின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.