சொந்த அண்ணன் மகளை காதலித்து கடத்திய சித்தப்பா - கதறிய பெற்றோர்கள்!
அண்ணன் மகளை, சித்தப்பா காதலித்து கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
காதல் விவகாரம்
திருப்பத்தூர் அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பதி- பூர்ணிமா தம்பதி . இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் 1 ஆண் பிள்ளை உள்ளனர். இவர்களின் 17 வயது மூத்த மகளை அதே பகுதியில் வசிக்கும் திருப்பதியின் தம்பி சத்யராஜ் (25).
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காதலித்து கடத்தி சென்றதாக கூறி அனுபிரியாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
பகீர் சம்பவம்
ஆனால், மகளை கடத்திச் சென்ற நபர் மீது இரண்டு மாதம் ஆகியும் நடவடிக்கை இல்லை என்று கோரிக்கை வைத்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி பெற்றோர் தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, போலீஸார் இருவரிடமும் சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனார்.