10 நிமிடம் விடாமல் லிப்லாக் அடித்த ஜோடி.. காதலனுக்கு நேர்ந்த சோகம் - பகீர் சம்பவம்!
காதலர்கள் முத்தமிட்டு கொண்டதால் கேட்கும் திறனை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி
சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்த சமயத்தில் இவர்கள் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
அப்போது அங்கு இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்துக்கொண்டனர். இவர்கள் சுமார் 10 நிமிடங்கள் வரை விடாமல் முத்தமிட்டுள்ளனர், அப்பொழுது திடீரென காதலனின் காதில் ஊசி குத்துவது போல் வலி ஏற்பட்டுள்ளது, அந்த வலி போக போக அதிகரித்தது, கேட்கும் திறனும் குறைந்துள்ளது.
ஷாக் கொடுத்த மருத்துவர்
இந்நிலையில், அவர்கள் இருவரும் மறுய்த்துவமணிக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது.
அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.
தற்பொழுது அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர், இவருக்கு முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.