ஒரே ஒரு பல் தான் ஆடிச்சு ..மொத்த பல்லையும் பிடுங்கி பல் டாக்டர்..!!
பாதிப்படைந்த ஒரே ஒரு பல்லை மட்டும் பிடுங்க சென்ற போது, தவறான சிகிச்சையால் மொத்த பல்லையும் பிடுங்கியதாக சென்னை பல் மருத்துவர் மீது பாதிக்கப்பட்டவர் புகார் அளித்துள்ளார்.
சென்னையில் பரபரப்பு
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் சரவணன். தனது கடைவாய் பல்லில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்த வந்த காரணத்தால், வலியின் காரணாமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றுள்ளார்.
அப்போது மருத்துவமனையில் பணிபுரிந்து மருத்துவர் ரோஷன் அவரது பல்லை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முயன்றுள்ளார். அப்போது சரவணனுக்கு நடந்த தவறான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சரவணனின் வாயில் 6 முறை அறுவை சிகிச்சைகளை ரோஷன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாடையே இல்லாம போயிடுச்சு
பின்னர் அதனை சரிசெய்ய சரவணனுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி ரோஷன் மேற்கொள்ள தற்போது தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலை சரவணனை தவித்து வருகின்றார். தவறான சிகிச்சை அளித்தது மட்டுமின்றி அதற்கு கட்டணமாக ஏழரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்ற பல் மருத்துவர் ரோஷன் மீது தற்போது சரவணன் புகார் அளித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த சரவணன், தனக்கு ஒரே ஒரு பல் தான் ஆடிய நிலையில் மருத்துவமனை சென்ற போது பல்லு வைக்கிறேன்என்று சொல்லி தாடையே இல்லாம மருத்துவர் ஆகிவிட்டார் என குற்றம்சாட்டினார். ஆனால் ஒவ்வொரு முறை பல் எடுத்த போதும், த னக்கு ஒரு பகுதியே பல் இல்லாமல் போனது தான் மிச்சம் என்றும் வேதனையுடன் கூறினார்.