ஒரே நபர்.. மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த வினோதம் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்!

United Kingdom England World
By Swetha Oct 18, 2024 12:30 PM GMT
Report

நபர் ஒருவர் மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்து வந்தது உலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஆணுறுப்பு

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவருக்கு மூன்று ஆணுறுப்பு இருப்பதை அறிந்து மருத்துவ உலகு அதிர்ச்சி அடைந்துள்ளது. மிகவும் அரிய பிறவி குறைபாடு என்ற வகையில் இதுவே உலகில் இரண்டாவது நிகழ்வு ஆகும். மருத்துவ உலகில் இது 'டிரிஃபாலியா' என்று அழைக்கப்படுகிறது.

ஒரே நபர்.. மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த வினோதம் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்! | Man Lived With 3 Penises A Rare Case Shook Doctor

கடந்த 2020ம் ஆண்டு ஈராக் நாட்டின் டுஹோக்கில் டிரிஃபாலியா குறைபாட்டை மருத்துவர்கள் முதன் முதலில் பதிவு செய்தனர். அப்போது குழந்தை ஒன்று, 3 ஆணுறுப்புகளுடன் பிறந்திருந்தது. இது தொடர்பாக பர்மிங்காம் மருத்துவப் பள்ளியின் மாணவர் ஆராய்ச்சியாளர்கள் 78 வயது முதியவரின் சடலத்தை ஆய்வு செய்தனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற மருத்துவர்கள் - ஆணுறுப்பை அறுத்த நர்ஸ்

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற மருத்துவர்கள் - ஆணுறுப்பை அறுத்த நர்ஸ்

வினோதம் 

முன்னதாகவே முதியவர் தனது உடலை ஆய்வுக்கு பயன்படுத்த அனுமதி அளித்திருந்த நிலையில், அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது. அந்த முதியவர் தன் வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியில் தெரிகிறது.

ஒரே நபர்.. மூன்று ஆணுறுப்புடன் வாழ்ந்த வினோதம் - அதிர்ச்சியில் மருத்துவர்கள்! | Man Lived With 3 Penises A Rare Case Shook Doctor

அதாவது, டிஃபாலியா, அல்லது இரண்டு ஆண்குறிகள் கொண்ட நிலை, டிரிபாலியாவுடன் ஒப்பிடுகையில் மிகவும் பொதுவான நிகழ்வு ஆகும். இது உலகில் ஐந்து முதல் ஆறு மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே இது பாதிக்கிறது. இன்றுவரை சுமார் 100 பேருக்கு மட்டுமே டிஃபாலியா ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜர்னல் ஆஃப் மெடிக்கல் கேஸ் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, டிரிஃபாலியாவின் ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மூன்று தனித்தனி ஆண்குறி தண்டுகள் இருப்பதால் வகைப்படுத்தப்படும் ஒரு அரிய பிறவி நிலை என்பது குறிப்பிடத்தக்கது.