நடுவானில் துடித்து உயிருக்கு போராடிய நபர்; டாக்டர் சொன்ன அந்த பொய் - திக் திக் நிமிடங்கள்!

Kerala Flight
By Sumathi Jan 17, 2024 06:41 AM GMT
Report

விமானத்தில் பயணி ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூச்சலிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயணி அவதி

கேரளா, கொச்சியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் பயணித்தனர். அதில் டாக்டர் சிரியாக் அபய் பிலிப்ஸ் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

akasa flight

அதில், 2 நாட்களுக்கு முன்பு கொச்சியில் இருந்து மும்பைக்கு ஆகாசா ஏர் விமானத்தில் நான் பயணித்து கொண்டிருந்தேன். அது ஒரு மாலை நேர பயணம். நான் பணியை முடித்து சோர்வாக இருந்தேன். இதனால் தூங்க வேண்டும் என முயற்சிகள் செய்தேன்.

நடுவானில் எகிறிய விமான கூரை; பறந்த பணிப்பெண் - அலறிய பயணிகள், என்ன நடந்தது?

நடுவானில் எகிறிய விமான கூரை; பறந்த பணிப்பெண் - அலறிய பயணிகள், என்ன நடந்தது?

பரபரப்பு சம்பவம் 

இந்த வேளையில் விமானத்தில் சத்தங்கள் கேட்டன. இதனால் நான் கண் விழித்து பார்த்தேன். அப்போது என் அருகே இருந்த ஒருவர் உயிருக்கு உயிருக்கு போராடினார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து நானும் அவருக்கு உதவி செய்தேன். இந்த வேளையில் அந்த நபர் பேச முயன்றார்.

நடுவானில் துடித்து உயிருக்கு போராடிய நபர்; டாக்டர் சொன்ன அந்த பொய் - திக் திக் நிமிடங்கள்! | Man Life In Mid Air On Akasa Flight Doctor Saves

அவரிடம் ஆக்சிமீட்டர் இருந்தது. அதன்மூலம் பரிசோதித்தேன். அப்போது அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 36 சதவீதமாக இருந்தது. இதற்கிடையே அந்த நபர் பேச தொடங்கினர். மூச்சுத்திணலுக்கு இடையே தனது சிறுநீரக பாதிப்பு பற்றி கூறினார். டயாலிசிஸ் செய்கிறீர்களா? என கேட்டேன்.

டாக்டர் உருக்கம் 

அவர் வாரத்தில் 3 நாட்கள் செய்வதாகவும், பயணத்தின் அடுத்த நாள் மீண்டும் சிகிச்சைக்கு செல்வதாகவும் கூறினார். மேலும் நேற்று இரவு மருந்துகள் தீர்ந்து விட்டதாகவும் தெரிவித்தார். அவரது செல்போனில் இருந்த அவருக்கான மருந்து சீட்டுகளை கவனித்தேன். அதில் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அதற்கான சோதனையை செய்தேன். அப்போது 280/160 என்ற அளவில் இருந்தது. மேலும் அவரது உடலில் அணுகக்கூடிய வகையில் இருந்த நரம்பில் 2 துளைகள் இட்டும் பயனில்லை. அதோடு டயாலிசிஸ் ஃபிஸ்துலா செய்யப்பட்ட இடத்தையும் பயன்படுத்த முடியவில்லை. இதனால் நான் அவருக்கு ஒரு ஃபிரூஸ்மைடு ஊசியை செலுத்தினேன்.

ஒரு கட்டத்தில் அவரை சமாதானம் செய்வது எப்படி என்பது எனக்கு தெரியவில்லை. இதனால் அவசர உதவிக்கு கிடைக்கும் இடத்துக்கு செல்ல 30 நிமிடங்கள் இருந்தாலும் இதோ வந்துவிட்டோம் என பொய் சொல்லி ஆறுதல்படுத்தினேன். இதற்கிடையே மூச்சுத்திணறல் சரியாகா விட்டாலும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்தது. அதன்பிறகு விமானம் தரையிறங்கி பிறகு அவர் ஆம்புலன்ஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அடுத்த நாள் அவர் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் எனக்கு மெசேஜ் செய்தனர். இந்த வேளையில் விமான பணிப்பெண்களுக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.