பக்கத்து வீட்டுக்காரருடன் தொடர்பு வைத்த மனைவி ... கணவன் செய்த கொடூர செயல்
உத்தரப்பிரதேசத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் தொடர்பு வைத்த மனைவியை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ராஜன்பூர் மாவட்டம் ரசூல்பூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு 28 வயதில் மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே மனைவிக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று அப்பெண் தனது கணவன் வீட்டில் இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரருடன் தகாத உறவில் இருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த கணவன் தனது மனைவி பக்கத்து வீட்டுக்காரரும் இருந்ததை நேரில் பார்த்துள்ளார்,. இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த நபர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மனைவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். இதனையடுத்து மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.