தாய், மனைவியை கொடூரமாக கொன்று நரமாமிசம் சாப்பிட்ட இளைஞர் - பகீர் சம்பவம்
தாய், மனைவியை கொடூரமாக கொன்று இளைஞர் ஒருவர் நரமாமிசம் சாப்பிட்டுள்ளார்.
குடிக்கு அடிமை
உத்தர பிரதேசம், குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா(30). இவர் மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார். இவரின் மனைவி பிரியங்கா மற்றும் தாயார் ரூனா தேவி இருவரும் குஷிநகரில் வசித்து வந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த ஊர் திரும்பிய சிக்கந்தர் அங்கேயே தங்கியுள்ளார். தொடர்ந்து மதுபானம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
கொடூர கொலை
இதனால் தாயையும், மனைவியையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்நிலையில், இருவரையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதில், தலை சிதைந்த நிலையில் இருவரும் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சென்று பார்க்கையில், மனைவி மற்றும் தாயாரின் தலையை சிதைத்து, அதில் இருந்து நரமாமிசத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.
உடனே சம்பவம் குறித்து அறிந்த போலீஸார் சிக்கந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.