பெற்றோரை கொடூரமாக கொன்ற மகன்; துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..கூலாக பாடிய வினோதம்!

Viral Video United States of America World
By Swetha Aug 27, 2024 07:59 AM GMT
Report

பெற்றோரை கொன்ற போலீசார் துப்பாக்கியால் சுட்டபோதும் கூலாக பாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொன்ற மகன்..

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்தவர் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் (41). இவர் தனது பெற்றோர் ரொனால்ட் கெர்ட்வில் (77) மற்றும் அன்டோனெட் கெர்ட்வில் (79) ஆகியோரை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பெற்றோரை கொடூரமாக கொன்ற மகன்; துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..கூலாக பாடிய வினோதம்! | Man Kills His Parents And Dog Got Arrested

அது மட்டுமல்லாமல், பெற்றோர் வளர்த்து வந்த நாயையும் அவர் கொலை செய்துள்ளார். வீட்டில் பராமரிப்பு ஊழியராக பணிபுரிந்து வந்தவரையும் தாக்கியுள்ளார். அத்துடன் கொலை செய்யப்பட்டது பற்றி கிராபிக்ஸ் போட்டோவை உறவினருக்கு அனுப்பியுள்ளார்.

அந்த உறவினர் இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் வீட்டில் இருந்து ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் தப்பி ஓட முயன்றார்.

மகனை கொடூரமாக கொன்று பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்!

மகனை கொடூரமாக கொன்று பிணத்தின் அருகில் அமர்ந்திருந்த தாய் - அதிர்ச்சி வாக்குமூலம்!

துப்பாக்கியால்..

அப்போது சாலையில் போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். உடனே அவரை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அப்போது ஜோசப் பிராண்டன் கெர்ட்வில், "நாங்கள் உங்களை விரும்புகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாகப் போகிறீர்கள்" என்றார்.

பெற்றோரை கொடூரமாக கொன்ற மகன்; துப்பாக்கியால் சுட்ட போலீஸ்..கூலாக பாடிய வினோதம்! | Man Kills His Parents And Dog Got Arrested

மேலும், "என்னை சுட்டு வீழ்த்தி விடுங்கள் எனக் கெஞ்சினார்". தொடர்ந்து சரணடைய மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை சுட்டனர். காயம் அடைந்த நிலையில் சுருண்டு விழுந்த அவரை போலீசார் கை விலங்கு போட்டு கைது செய்தனர்.

காயத்திற்கு சிகிச்சை அளித்தபோது கூலாக பாட்டு பாடினார். பிறகு அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.