பாய் பெஸ்டீஸ் உடன் வீடியோ - தனிமையில் சந்தித்து காதலியை கொன்று எரித்த காதலன்!
ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்ததால் காதலன், காதலியை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிக்-டாக்
பெங்களூர், அரகெரே பகுதியைச் சேர்ந்தவர் மாருதி ரத்தோடு. இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கும் உத்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற பெண்ணிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. மேலும் இவர் டிக்-டாக் போன்ற செயலி மூலம் பல ஆண் நண்பர்களுடன் வீடியோ எடுத்து வந்தார்.
இதனை இவரது காதலன் பல முறை கண்டித்துள்ளார். இந்நிலையில் அவர் சொந்த ஊரில் உள்ள வீட்டிற்கு, யாரும் இல்லாத நேரம் பார்த்து தனது காதலியை அழைத்து வந்துள்ளார். அப்பொழுது அந்த வீடியோக்கள் குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காதலி கொலை
அதில் ஆத்திரமடைந்த மாருதி அவர் காதலியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு அந்த உடலை விளை நிலத்தில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். பிறகு அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்றினர் என்றும் கூறப்படுகிறது.
அங்கு தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணையை மேற்கொண்டதில் அவர் தனது காதலியை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.