உணவு கொடுக்காத மருமகள்.. சுட்டுக்கொன்ற மாமனார் : மராட்டியத்தில் அதிர்ச்சி சம்பவம்

Maharashtra mankillsdaughterinlaw
By Petchi Avudaiappan Apr 15, 2022 08:34 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

மகாராஷ்ட்ராவில்  மருமகளை மாமனார் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்ட்ரா  மாநிலம் தானே மாவட்டம் ரபோடி ருத்து பார்க் பகுதியைச் சேர்nத சீமா பாட்டீல் என்பவர் தனது மாமனார் காசிநாத் பாட்டீல் உடன் வசித்து வருகிறார். காசிநாத்  ரியல் எஸ்டேட் அதிபராக உள்ளார்.

இதனிடையே  நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் சீமா பாட்டீல் மாமனாருக்கு டீ கொடுத்தார். அதிக நேரமான பிறகும் உணவு கொடுக்காமல் டீ மட்டும் கொடுத்ததால் மாமனார் காசிநாத் ஆத்திரமடைந்தார்.

இதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர் துப்பாக்கியை எடுத்து சீமா பாட்டிலை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு மருமகளின் வயிற்றில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவரை மீட்ட  குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அதேசமயம் மாமனார் காசிநாத் பாட்டீல் வீட்டில் இருந்து வெளியேறி தப்பியோடி விட்டார்.

இந்நிலையில் சீமாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சீமா பாட்டீல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக மற்றொரு மருமகள் அளித்த புகாரின்பேரில் போலீசார் காசிநாத் பாட்டீல் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள காசிநாத் பாட்டீலை தேடி வருகின்றனர்.