இளம்பெண்ணை கொன்று உடலை ப்ரிட்ஜில் வைத்த நபர்! அதிர்ச்சி சம்பவம்

By Fathima Mar 30, 2026 11:11 AM GMT
Report

இளம்பெண் கொலை

ஆந்திராவில் இளம்பெண் ஒருவரை கொன்று உடலை துண்டாக வெட்டி ப்ரிட்ஜில் வைத்த செயல் நடுங்க வைத்துள்ளது.

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் ராஜம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரா(வயது 35), கடற்படையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.

வேலையின் காரணமாக விசாகப்பட்டினத்தில் வீடு எடுத்து தங்கியுள்ளார், சில வாரங்களுக்கு முன் ரவீந்திராவின் மனைவி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார், இந்நிலையில் தனியாக இருந்த ரவீந்திரா சில நாட்களுக்கு முன்னர் ரத்த கறையுடன் காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.

இளம்பெண்ணை கொன்று உடலை ப்ரிட்ஜில் வைத்த நபர்! அதிர்ச்சி சம்பவம் | Man Killed Young Woman Cut Her Body Into Pieces

தான் ஒரு பெண்ணை கொலை செய்து விட்டதாகவும், உடலை வெட்டி ப்ரி்ட்ஜில் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலிசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்து உடல் பாகங்களை மீட்டனர்.

யார் அந்த பெண்?

விசாரணையில் அந்த பெண்ணின் பெயர் மவுனிகா என தெரியவந்துள்ளது, ரவீந்திராவுக்கும், மவுனிகாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததும் தெரியவந்தது.

இந்த சூழலில் சம்பவ தினத்தன்று வீட்டிற்கு வந்த மவுனிகாவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, இதனால் கோபத்தில் அவரை கொன்றுள்ளார், அப்படியே ஆத்திரம் தீராமல் உடலை துண்டாக வெட்டி இடுப்புக்கு மேல் பகுதியை  ப்ரிட்ஜில் வைத்துள்ளார்.

இடுப்புக்கு கீழ் பகுதி மற்றும் தலையை சாக்குப் பையில் கட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தூக்கி வீசியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இளம்பெண்ணை கொன்று உடலை ப்ரிட்ஜில் வைத்த நபர்! அதிர்ச்சி சம்பவம் | Man Killed Young Woman Cut Her Body Into Pieces