ரகசிய வாழ்க்கை... மனைவியின் காதலனை ஓட ஓட வெட்டிக் கொன்ற கணவன்

investigation
By Fathima Aug 12, 2021 09:56 AM GMT
Report

கன்னியாகுமரியின் கீழமுட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்பால்(வயது 35), இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இவருக்கும், சூசை மிக்கெல் என்பவரின் மனைவி ஜெனிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதுபற்றி சூவை மிக்கெலுக்கு தெரியவர மனைவியை கண்டித்துள்ளார், இருப்பினும் ஜெனி ஜான் பாலுடனான உறவை தொடர்ந்துள்ளார்.

இதனால் சூசை மிக்கெல் ஜெனியிடம் கெடுபிடி காட்டவே, ஜான் பாலை சந்திக்க முடியாமல் தவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஜான் பாலுடன் தனிக்குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளார்.

இதுபற்றி தெரிந்ததும் சூசை மிக்கெல் கடும் கோபத்தில் அவர்களை பார்க்க சென்றுள்ளார்.

வீட்டுக்கு வெளியே இருவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்ததால் சூசை மிக்கெலின் கோபம் அதிகரித்தது.

இருவருக்கும் அறிவுரை கூறியும், சூசை மிக்கெலிடம் சண்டையிட்டுள்ளனர், அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

அப்போது ஆத்திரமடைந்த சூசை மிக்கேல், ஜான்பாலை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் சம்பவ இடத்திலேயே ஜான் பால் துடிதுடித்து உயிரிழந்தார், ஜான் பாலை வெட்டியபோது தடுத்த ஜெனிக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததால், படுகாயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஜான்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த ஜெனியை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், சூசை மிக்கேலை கைது செய்தனர்.