கணவனை ஓரங்கட்டி விட்டு மணிக்கணக்கில் காதலனுடன் பேச்சு!! ஆத்திரத்தில் கணவன் செய்த பயங்கர செயல்
திருப்பூரில் கணவனை தவிர்த்துவிட்டு காதலனுடன் போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூரின் அவிநாசியில் வசித்து வந்தவர் விஜய்(35), தனது முதல் திருமணத்தை மறைத்து பிரியா என்பவரை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கின்றனர், அவிநாசி அருகே உள்ள கம்பெனியில் விஜய் பணிபுரிந்து வந்துள்ளார், பிரியா வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை கவனித்து வந்தார்.
இந்நிலையில் சில மாதங்களாக பிரியாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது, அவருடன் அடிக்கடி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இதனால் பிரியாவுக்கும், விஜய்க்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது, ஆனால் பிரியா கண்டுகொள்ளவில்லை.
சம்பவதினத்தன்று விஜய், பிரியாவுக்கு போன் செய்துள்ளார், அரைமணிநேரமாக லைன் பிஸியாகவே இருந்ததால் டென்ஷனான விஜய் வீட்டுக்கு வந்துள்ளார்.
யாரிடம் பேசிக்கொண்டிருந்தாய்? என கண்டிப்புடன் கேட்டுள்ளார், இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது . அப்போது ஆத்திரப்பட்ட விஜய் பூரிக்கட்டையால் முகத்தில் அடித்திருக்கிறார். அதிகம் தாக்கப்பட்ட பிரியா ரத்தம் கொட்ட அதிலேயே கீழே விழுந்து இருக்கிறார்.
தொடர்ந்து பிரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார், அங்கிருந்த கிளம்பி அவிநாசி சென்ற பின், பக்கத்து வீட்டில் உள்ள சித்ராவிடம் போன் செய்து பிரியா போனை எடுக்கவில்லை என்ன ஆனது? என்று பாருங்கள் என கேட்டுள்ளார்.
அவர் பார்த்துவிட்டு ரத்தவெள்ளத்தில் பிரியா கீழே இறந்து கிடப்பதாக சொல்லவும், அப்போதுதான் தனக்குத் தகவல் தெரிந்தது போல் பதறியடித்துக் கொண்டு வந்திருக்கிறார்.
நகைக்காக இந்த கொலை நடந்தது என்று நடனம் ஆடுவதற்காக மனைவியின் உடலில் இருந்த நகைகளை கழற்றி எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.
ஆனால் போலிசார் நடத்திய விசாரணையில் விஜய்யின் நாடகம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.