வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தவர் கொலை

By Fathima Mar 07, 2026 04:52 AM GMT
Report

விருதுநகரில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகரின் சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா செல்வம்(வயது 30), பட்டுக்கோட்டையில் லோடுமேனாக வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பழனி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, சொந்த ஊரான சாமிநத்தம் கிராமத்துக்கு வந்துள்ளார்.

சம்பவ தினத்தன்று வழக்கம் போல் வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கிகொண்டிருந்தார்.

வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டிருந்தவர் கொலை | Man Killed In Virudhunagar

அப்போது நள்ளிரவில் ஆயுதங்களுடன் வந்த கும்பலொன்று, ராஜா செல்வத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

மறுநாள் காலை குடும்பத்தினர் வந்து பார்த்தபோது தான் ராஜா செல்வம் இறந்துகிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்து விரைந்து வந்த திருச்சுழி பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

எதற்காக கொலை நடந்தது? முன்விரோதம் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.