கோவில் திருவிழாவில் அரிவாள் வெட்டு - அதிர்ச்சி சம்பவம்
தகரவெளி புற்றடி மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற நபருக்கு அரிவாள் வெட்டு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் வயது 35. இவர் நேற்று தகரவெளி புற்றடி மாரியம்மன் பங்குனி தீமிதி திருவிழா நடைபெற்றதை அடுத்து தனது குடும்பத்துடன் திருவிழாவிற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அங்கு மது போதையில் இருந்த அடையாளம் தெரியாத நபர் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.
திடீரென கையில் இருந்த அரிவாளால் ரமேசை கழுத்தில் வெட்டியதில் பலத்த காயத்துடன் ரமேஷ் கீழே விழுந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் மற்றும் காவல் துறையினர் ரமேசை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து, இது திட்டமிட்டு நடைபெற்றதா இல்லை எதிர்பாராதவிதமாக நடந்ததா என காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் கிராந்தி பகுதியைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணையும் காதில் அரிவாளால் வெட்டி திருத்துறைபூண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.