உங்க மகளை கொன்று சூட்கேசில் வச்சுருக்கேன் - மாமியாருக்கு போன் செய்த மருமகன்!
மனைவியை கொன்று, கணவன் வெட்டி சூட்கேசில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம்
மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் ராகேஷ்(35). இவரது மனைவி கவுரி (32). பெங்களூர், தொட்டகம்மனஹள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
இருவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்பதால் வொர்க் ப்ரம் ஹோமில் வீட்டில் இருந்தபடியே வேலை பார்த்துள்ளனர். இவர்களுக்கு குழந்தை இல்லை. அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஒரு சண்டையில் ஆத்திரமடைந்த, ராகேஷ், தனது மனைவியை கத்தியை எடுத்து வயிற்றில் குத்தி கொடூரத்தில் ஈடுபட்டுள்ளார்.
உடனே படுகாயமடைந்த மனைவி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தொடர்ந்து, மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார். பின் நண்பருக்கு போன் செய்து என் மனைவி தற்கொலை செய்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
கணவன் வெறிச்செயல்
உடலை வெளியே கொண்டு போட்டுவிட்டால் மாட்டிவிடுவோம் என எண்ணி, கவுரியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் போன் செய்து, "நான் உங்கள் மகளை கொன்று விட்டேன். உடலை வெட்டி சூட்கேசில் அடைத்து வைத்திருக்கிறேன்" என்று கூறிவிட்டு வைத்துள்ளார்.
உடனே பெற்றோர் அளித்த புகாரில், போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் தலைமறைவான கணவனை தேடியதில், சதாரா பகுதியில் கார் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளார்.
தொடர் விசாரணையில், மனைவியை கொலை செய்து விட்டு அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.