காதலிக்க மறுத்த மாணவி; நடுரோட்டில் இளைஞர் வெறிச்செயல் - கதறும் குடும்பம்!
காதலிக்க மறுத்த மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒருதலை காதல்
வேலூர், படவேடு கிராமத்தை சேர்ந்த கோபால் - வரலட்சுமி தம்பதியின் மகள் யாமினி பிரியா(20). கோபால் தன் குடும்பத்தினருடன் பல ஆண்டுகளாக, பெங்களூரில் வசித்து வருகிறார்.
தனியார் கல்லுாரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்த யாமினி, கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால் யாமினி பிரியாவை, அவரது எதிர்வீட்டில் வசிக்கும் விக்னேஷ், 25, கொலை செய்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீசார் விக்னேஷை கைது செய்துள்ளனர். இதற்கிடையில், விக்னேஷை பைக்கில் அழைத்துச் சென்று, சோழதேவனஹள்ளியில் தங்க வைத்த, விக்னேஷின் நண்பர் ஹரிஷ், 30, என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இளைஞர் வெறிச்செயல்
முதற்கட்ட விசாரணையில், யாமினி பிரியா தினமும் வீட்டில் இருந்து எத்தனை மணிக்கு புறப்படுகிறார். எங்கு செல்கிறார்? எப்போது வருகிறார்; யாருடன் பேசுகிறார் என்பதை, விக்னேஷின் நண்பர்கள் கண்காணித்து, விக்னேஷுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
வாட்ஸாப்பில் மிஷன் யாமினி பிரியா என்ற பெயரில் குழு உருவாக்கி, அதில் தகவலை பரிமாறியதும் அம்பலமாகியுள்ளது. இந்நிலையில், 'ஒன்றும் தெரியாத அப்பாவியான என் மகளை, அந்த பாவி கொன்றுவிட்டான்.
அவனை சும்மா விட கூடாது; என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும்; என் மகளை போன்று, வேறு எந்த பெண்ணுக்கும் இந்த நிலை வர கூடாது' என, யாமினி பிரியாவின் தாய் வரலட்சுமி வேதனை தெரிவித்துள்ளார்.