தகாத உறவுக்கு மறுத்த நண்பனின் மனைவி - இளைஞர் செய்த செயல்!
இளைஞர் ஒருவர் நண்பனின் மனைவியை கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார்.
மறுத்த பெண்
கர்நாடகா, திருபாளையாவில் வசித்து வந்தவர் மந்திரா மண்டல்(27). இவருக்கும், பிஜோன் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார்.
குடும்ப விவகாரத்தால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது பிஜோனின் நண்பர் சுமன் மண்டல் (29) இருவரும் அந்தமானுக்கு வேலைக்கு சென்றிருந்தனர். சமீபத்தில் சுமன் மட்டும் பெங்களூருவுக்கு திரும்பி வந்திருந்தார்.
இளைஞர் வெறிச்செயல்
இந்நிலையில் மந்திரா வீட்டுக்கு சென்ற சுமன், அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டின் மற்றொரு அறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மந்திரா வீட்டிற்குள் சென்ற சுமன் தன்னுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கலாம் என்றும், இதற்கு மந்திரா சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.
அதன்பின் போலீசுக்கு பயந்து சுமன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.