மகனை கொன்று புதைத்த பெற்றோர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்

By Fathima Apr 04, 2026 08:42 AM GMT
Report

குடிபோதையில் தகராறு செய்து வந்த மகனை பெற்றோரே கொன்று புதைத்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.

வாழப்பாடி அடுத்த பேளூர் கரடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30), இவருக்கும் வினோதினி என்பவருக்கும் திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது.

ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மகன் இறந்து போனார், குடிக்கு அடிமையான மணிகண்டன் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் கோபித்துக்கொண்டு வினோதினி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட மணிகண்டன் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளார்.

மகனை கொன்று புதைத்த பெற்றோர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல் | Man Killed By Parents

கடந்த மாதம் 8ம் தேதிக்கு பின்னர் மணிகண்டன் போன் எதுவும் பேசவில்லை, இதனால் சந்தேகமடைந்த வினோதினி கணவரை காணவில்லை என கடந்த ஏப்ரல் 1ம் தேதி பொலிசில் புகார் அளித்தார்.

வழக்குபதிவு செய்த வாழப்பாடி போலிசார் தீவிர விசாரணை மேற்காண்டனர், முடிவில் தகராறு செய்து வந்த மணிகண்டனை அவருடைய பெற்றோர் கல்லால் தாக்கி கொன்றுவிட்டு பாக்குத்தோப்பில் புதைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து இன்று காலை வாழப்பாடி வட்டாச்சியர், போலிஸ் டிஎஸ்பி முன்னிலையில் மணிகண்டன் உடலை தோண்டி எடுத்தனர்.

உடல் அழுகிய நிலையில் இருந்ததால் உடல்கூறாய்வு மருத்துவ நிபுணரை வரவழைத்து உடற்கூராய்வு முடிந்தவுடன் அதே இடத்தில் அடக்க செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

பெற்ற மகனை பெற்றோரே கொன்று புதைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.