60 வயதுடைய நபரை தீ வைத்து எரித்து கொன்ற கிராமமக்கள் - மிரளவைக்கும் கொடூர பின்னணி!
ஒரு கிராமமே சேர்ந்து ஒருவரை தீவைத்து எரித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் தொம்பிரிகுடா கிராமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் சமூகத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அந்த கிராமத்தை சேர்ந்த 60 வயதான அடாரி தொம்புரு என்பவர் 60 வயதான வெளியூர்களுக்கு சென்று மாந்திரீகம் செய்ய கற்று வந்து செய்வினை செய்து தங்களை பொருளாதார ரீதியாக உயர விடாமல் தடுப்பதாக அக்கிராமக்கள் கூறிவந்தனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் சம்பவத்தன்று கிராம மக்கள் அனைவரும் அடாரி தொம்புரு வீட்டிற்க்கு சென்று அவரை கற்கள் மற்றும் கட்டைகளால் கடுமையாகத் தாக்கி பெட்ரோலை ஊற்றி உயிருடன் தீவைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் வலி தாங்க முடியாத அடாரி தொம்புரு அலறித்துடித்து தீயில் கருகி உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் மேற்கொண்டு வருகின்றனர்.