ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவன் - தண்ணீரில் மூழ்கடித்து இளைஞர் கொடூரச்செயல்!
சிறுவனை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓரின சேர்க்கை
புதுச்சேரி, நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார். 9 வயதாகும் அந்த சிறுவன் 4ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், திடீரென மாயமான சிறுவன் அங்குள்ள வாய்க்காலில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டான். உடனே தகவலறிந்து விரைந்த போலீஸார் உடலை மீட்டு விசாரனை மேற்கொண்டனர். அதில், சிறுவனது உடலில் காயங்கள் இருந்துள்ளன.
சிறுவன் கொலை
அதே சமயம், அதே ஊரைச்சேர்ந்த கஸ்பர் மகன் அருள்ராஜ் (27) என்பவர் தலைமறைவானது தெரியவந்தது. தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்ததில், அருள்ராஜ் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்து, செல்போனில் படத்தை காட்டியுள்ளார்.
மேலும், ஓரினச்சேர்க்கைக்கு வலுக்கட்டாயமாக அழைத்தபோது, சிறுவன் மறுத்து அவரது கையை கடித்துவிட்டு ஓடியுள்ளார். அதில் ஆத்திரத்தில் சிறுவனை அருள்ராஜ் காலால் உதைத்து தள்ளியதில் வாய்க்கால் ஓரம் இருந்த கூர்மையான கம்பி கழுத்தில் குத்தி மயங்கியுள்ளான்.
இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, சிறுவனை வாய்க்கால் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அருள்ராஜ் தப்பியோடியுள்ளார்.
இதன் அடிப்படையில், அவர் மீது போக்சோவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.