பிரிந்து சென்ற மனைவி கர்ப்பம் - ஆத்திரத்தில் மூவரை கொடூரமாக கொன்ற கணவன்
மனைவி மீது ஆத்திரமடைந்த கணவன் ஒரே இரவில் மூன்று பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி கர்ப்பம்
ராணிப்பேட்டை, புதுக்குடியானூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி பாலு. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புவனேஸ்வரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், புவனேஸ்வரிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற நபருக்கு இடையே முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
3 பேர் கொலை
இதனால் மனைவி புவனேஸ்வரி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது மனைவி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை கேள்விப்பட்ட பாலு மாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு மாமியார் பார்வதியை குத்தி கொலை செய்தார்.
கணவரிடமிருந்து தப்பித்து மனைவி புவனேஸ்வரி அங்கிருந்து ஓடிவிட்டார். தொடர்ந்து, விஜய் வீட்டிற்கு சென்றதில் அவர் வீட்டில் இல்லாததால் அவரது தாய், தந்தை இருவரையும் இரும்பு ராடால் தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.
உடனே சம்பவம் குறித்து அறிந்து விரைந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு, பாலுவை கைது செய்துள்ளனர்.