உயிர் நண்பன் மரணம் - தானும் உடன் கட்டை ஏறி உயிரை விட்ட இளைஞர்!
புற்று நோயால் இறந்த உயிர் நண்பனின் சிதையில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நண்பன் மரணம்
உத்தரப்பிரதேசம், மதிய நாடியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார்(40). இவரது நண்பர் கெளரவ் சிங்(42). இருவரும் நெருங்கிய நண்பர்கள். திருமண நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்து டிரம்ஸ் அடிக்கும் தொழிலை செய்து வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசோக் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனை கேட்ட கெளரவ் துக்கம் தாளாமல் துடித்துள்ளார்.
இளைஞர் தற்கொலை
அசோக்குமாரின் உடல் இறுதிச்சடங்கிற்காக எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அனைவரும் செல்ல ஆரம்பித்தனர். ஆனால் கெளரவ் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தார். திடீரென கெளரவ் தன் நண்பரின் சிதையில் குதித்துவிட்டார்.
இதனை பார்த்தவர்கள் ஓடி வந்து கெளரவை மீட்டனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கெளரவ் இறந்து போனார். இதையடுத்து கெளரவ் உடல் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. தற்போது, இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.