மருத்துவமனையில் ஆடையின்றி ஓடிவந்த நோயாளி..மருத்துவர்கள் செய்த செயல் - வைரல் வீடியோ!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஆடை ஏதுவுமின்றி, ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நோயாளி
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமின் என்ற பகுதியில் பன்டி நினாமா என்ற இளைஞர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்த நிலையில்,அவரது மனைவியிடம் அவர் கோமாவில் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் ரூ.1 லட்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் ஆடை ஏதுவுமின்றி, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்து அங்கு நடந்தவற்றை முழுமையாக விவரித்திருக்கிறார்.
மருத்துவமனை
அந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த விஷயம் குறித்து தொடர்புடைய மருத்துவமனை மீது விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாநில சுகாதாரத் துறை இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.