15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குழந்தை பிறந்த வழக்கு; குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
15 வயது சிறுமியை கர்பமாக்கி, சிறுமிக்கு குழந்தை பிறந்த வழக்கில் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் , பெருமங்களம் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு திருமணமாகி மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் அய்யப்பன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் அச்சிறுமி கர்பமானதால் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் நன்னிலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி மாணவி மற்றும் அவரது குழந்தைக்கு அய்யப்பன் தான் காரணம் என அதிகாரபூர்வமாக தெரிய வந்தது. இது தொடர்பான வழக்கு திருவாரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி திரு. விஜயகுமார் குற்ற செயலில் ஈடுபட்ட அய்யப்பனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.