நான் எச்சிலை துப்ப வேண்டும்... ஜன்னலை திறங்க... - விமான பணிப்பெண்ணை வம்புக்கு இழுத்த நபர்..!
நான் எச்சிலை துப்ப வேண்டும், ஜன்னலை திறங்க என்று பறக்கும் விமானத்தில் விமான பணிப்பெண்ணை வம்புக்கு இழுத்த நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விமான பணிப்பெண்ணை வம்புக்கு இழுத்த நபர்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பறக்கும் விமானத்தில் ஒரு இளைஞர் தன் இருக்கையில் அமர்ந்து பணிப்பெண்ணை அழைக்கிறார்.
அப்போது, அந்த இளைஞர் அருகில் வந்த விமான பணிப்பெண் சொல்லுங்கள் சார் என்றார்... அதற்கு அந்த இளைஞர், தன் கையில் ஏதோ தேய்ப்பதுபோல் நடித்து, அந்த ஜன்னலை திறங்க... நான் குட்காவை (புகையிலை மெல்லும்) துப்ப வேண்டும் என்று கூறினார். அவர் நடிப்பதை அறிந்த பணிப்பெண் மன்னித்துவிடுங்கள்.. திறக்க முடியாது சார்.. என்று சிரித்துக்கொண்டு சொல்கிறார்.
தற்போது, சமூகவலைத்தளங்களில் விமான பணிப்பெண்ணை வம்புக்கு இழுத்த இளைஞரின் நகைச்சுவை வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னதான் இருந்தாலும் இந்த இளைஞருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது... என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
