இளைஞரை கத்தியால் மிரட்டி பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்!

Chennai Sexual harassment
By Vinothini May 30, 2023 05:21 AM GMT
Report

சென்னையில் ஒரு நபர் கத்தியை வைத்து இளைஞரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் 18 வயதான இளைஞர். இவர் மாதவராத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

man-harassed-youngster-in-chennai

இவர் விடுமுறை நாட்களில் பகுதி நேரமாக கேட்ரிங் சர்வீஸ் வேலை செய்து வருகிறார்.

அப்பொழுது சத்யகுமார் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் இவர் அந்த இளைஞனிடம் தன்னிடத்தில் வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார்.

மேலும், அவரது செல்போன் என்னை வாங்கியுள்ளார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில், அந்த நபர் இளைஞனுக்கு தொடர்பு கொண்டு, கேட்ரிங் வேலை ஒன்று இருப்பதாக கூறி பெரியமேடு பகுதிக்கு அழைத்துள்ளார்.

man-harassed-youngster-in-chennai

இதனை நம்பி அவரும் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர் தப்பி சென்றார்.

மேலும், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சிகளின் உதவியோடு அவரை தேடி வருகின்றனர்.