தகாத உறவு; கள்ளக் காதலனின் தலையை மனைவிக்கு பரிசளித்த கணவன் - தென்காசியே அதிர்ந்தது!
மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரின் தலையை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வேலுச்சாமி(32) - இசக்கியம்மாள். அதே பகுதியை சேர்ந்த முருகன் (41) என்பவருடன் இசக்கியம்மாளுக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக் காதலாக மாறியுள்ளது.
இதுகுறித்து அறிந்த கணவன் வேலுச்சாமி மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத இசக்கியம்மாள், தொடர்ந்து கள்ளக் காதலனுடன் உறவில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கு இடையே சண்டை ஏற்படவே இசக்கியம்மாள் தூத்துக்குடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வேலுச்சாமி சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த கள்ளக்காதலன் முருகனிடம் சென்று மனைவியுடன் தகாத உறவில் இருப்பதாக கூறி சண்டையிட்டுள்ளார்.
வெட்டி கொலை
ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து முருகனின் தலையை வெட்டியுள்ளார். பின்னர் வெட்டப்பட்ட முருகனின் தலையை எடுத்துக்கொண்டு மனைவியிடம் சென்ற வேலுச்சாமி " உன் காதலன் தலையை கொண்டு வந்துள்ளேன் பார்" என்று கூறியுள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி மற்றும் அவரின் உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வேலுச்சாமியை கைது செய்தனர். மேலும் முருகனின் தலையை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.