கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் தான்.. 17 வருஷமா உணவே சாப்பிடாமல் உயிர் வாழும் நபர்
17 ஆண்டுகளாக கூல்ட்ரிங்க்ஸ் மட்டுமே குடித்து நபர் ஒருவர் உயிர் வாழ்ந்து வருகிறார்.
நீர் ஆகாரம் மட்டும்..
ஈரான் நாட்டைச் சேர்ந்தவர் ஹோலம்ரேஸா அர்தேஷிரி. ஃபைபர்கிளாஸ்களை சீரமைத்துக் கொடுப்பதன் மூலமாக கிடைக்கின்ற வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் உணவை தொட்டுக்கூட பார்க்காமல் குளிர்பானங்களை குடித்தே பல ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து வருகிறார்.

கோலா, பெப்ஸி பானங்களை மட்டுமே அருந்தி வரும் இவருக்கு பசி உணர்வே வருவதில்லையாம்.. இதுகுறித்து அவர் கூறுகையில், “எந்த காரணமும் இல்லாமல் திடீரென்றுதான் இந்தப் பழக்கம் ஏற்பட்டது. இப்போது வரை என்னால் காரணத்தை கண்டறிய முடியவில்லை.
வினோத பழக்கம்
ஒரு தடித்த முடி ஒன்று என் வாயில் இருப்பதைப் போல உணருகிறேன். அதிலும் முடியின் ஒரு பகுதி வாயிலும், மற்றொரு பகுதி என் வயிறு வரையிலும் நீண்டு இருப்பதைப் போல தெரிகிறது. நான் என்ன செய்தாலும் இந்த முடியை அகற்ற முடியவில்லை. இந்த முடி என் தொண்டையில் சிக்கியிருப்பதாக உணருகிறேன்.
இதனால் எனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதை எப்படி புரிய வைப்பது என்றே தெரியவில்லை. மருத்துவர்களால் என்னுடைய பிரச்சினையை கண்டறிய முடியவில்லை. என் வாயில் முடி இல்லை என்றாலும், அந்த உணர்வு என்னை ஏதோ செய்கிறது.
மனநல மருத்துவரால் கூட இதன் தீர்வை கண்டறிய முடியவில்லை.
உணவை பார்த்தாலே குமட்டல் வந்துவிடுமாம். இதனால், அவரது குடும்பத்தினர் இவர் முன்னிலையில் உணவு சாப்பிடுவதில்லையாம். இரவில் 4 மணி நேரம் மட்டுமே இவர் தூங்குவாராம். இருப்பினும் போதுமான ஆற்றலை கொடுப்பது குளிர்பானங்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.