பிரசாதம் தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

sexual abuse patna
By Petchi Avudaiappan Dec 27, 2021 07:26 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

பாட்னாவில் 12 வயது சிறுமியிடம் பிரசாதம் தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி ஒடிசா மாநிலம் பலசுரே மாவட்டம் சோரா கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தனது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு கோவில் அருகே நின்றுகொண்டிருந்த 52 வயது நபர் கோவில் பிரசாதம் வாங்கித்தருவதாக கூறி அந்த சிறுமியை கோவிலுக்கு பின்புறம் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தனக்கு நடந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை தொடர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை போக்சோ சிறப்பு கோட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. 13 சாட்சியங்கள் மற்றும் 18 ஆவணங்களில் அடிப்படையில் சிறுமியை 52 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதையடுத்து, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.