ஒருதலைக் காதல்.. சென்னையை உலுக்கிய கொலை வழக்கு - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கழுத்தறுத்து கொலை
சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி என்ற கல்லூரி மாணவியை அழகேசன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடைசிவரை அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர் கடந்த 09/03/2018 அன்று அஸ்வினியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதனையடுத்து அழகேசன் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த நேரத்தில் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை சென்னை அள்ளிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஃபாரூக் முன்னிலையில் நடைபெற்றது.
விசாரணையின் முடிவில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அழகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.