39 முறை நிராகரிக்கப்பட்டு கூகுள் பணியைக் கைப்பற்றிய நபர் : வைரலாகும் பதிவு

Viral Photos
By Irumporai Jul 27, 2022 06:57 PM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

நவீன உலகில் அனைவரும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். படித்தற்கு வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை சிலர் பிடித்தும் செய்து வருகின்றனர்.

கூகுளில் வேலை

அதிலும் சிலர் தனது கனவு வேலையைத் தன்வசப்படுத்த படாதபாடு படுகின்றனர். அந்த வகையில் கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட இளைஞரின் விண்ணப்பம் 39 நிராகரிப்பிற்குப் பின் ஏற்கப்பட்டுள்ள சம்பவம் காண்போரை ஊக்கமடைய செய்துள்ளது.

39 முறை நிராகரிக்கப்பட்டு கூகுள் பணியைக் கைப்பற்றிய நபர் :  வைரலாகும் பதிவு | Man Gets Job In His Google After 39 Attempts

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்தவர் டைலர் கோஹன். இவர் டோர்டேஷ் என்ற நிறுவனத்தில் ஸ்ட்ராட்டஜி அண்ட் ஆபரேஷன் பிரிவில் இணை மேலாளராக பணியாற்றி வந்தார். ஆனால், அவருக்குக் கனவு கூகுளில் வேலை செய்ய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது.

வைரலாகும் பதிவு

அதற்காக டைலர் கோஹன் தொடர்ந்து தன்னுடைய முயற்சிகளைச் செய்து வந்துள்ளார். இதுவரை அவரின் விண்ணப்பம் 39 முறை நிராகரிக்கப்பட்டுள்ளது. விடா முயற்சியால் கடைசியாக அவர் கனவு நினைவாகிவிட்டது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி அவருக்குக் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துவிட்டது.

39 முறை நிராகரிக்கப்பட்டு கூகுள் பணியைக் கைப்பற்றிய நபர் :  வைரலாகும் பதிவு | Man Gets Job In His Google After 39 Attempts

இது குறித்து டைலர் கோஹன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், "விடாமுயற்சிக்கும், பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது" என்று வேடிக்கையாகப் பகிர்ந்துள்ளார் "

அது என்னவென்பதை தெரிந்துகொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு" என்று பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவுடன் கூகுளுக்குத் தான் அனுப்பிய விண்ணப்பங்கள், அங்கிருந்து பெறப்பட்ட பதில்கள் என்று அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்களாக எடுத்துப் பதிவேற்றியுள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.