குடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை
புதுக்கோட்டை மாவட்டம் மருதந்தலை கிராமத்தைச் சேர்ந்த நபர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், குடிக்க பணம் கொடுக்க மறுத்த தனது தாயை, மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தாயை எரித்து கொன்ற மகன் சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்து, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தாயை கொன்ற மகன் சந்தோஷ் குமாருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு அளித்தார். மேலும், தவறை உணரும் வகையில் 3 மாதம் தனிமை சிறையில் சந்தோஷ் குமாரை அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட அதிக சக்திவாய்ந்த வெடிபொருள்! ஈஸ்டர் வழக்கில் ஜமைக்காவில் இருந்து வழங்கப்பட்ட சாட்சியம் IBC Tamil