உலகின் நீண்ட கால மரண தண்டனை கைதி - 46 ஆண்டுக்கு பிறகு நிரபராதி என தீர்ப்பு

Japan Prison
By Karthikraja Sep 27, 2024 04:30 PM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

46 ஆண்டு காலம் சிறையில் கழித்த மனிதரை நிரபராதி என அவரின் 88 வயதில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை குற்றம்

ஜப்பானை சேர்ந்த தொழில் முறை குத்து சண்டை வீரரான இவாவோ ஹகமடா(iwao hakamada), மிசோ என்னும் ஜப்பானிய உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றினார்.  

1966 ஆம் இவாவோ ஹகமடாவின் முதலாளி மற்றும் முதலாளியின் மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்து விட்டு கொள்ளையடித்தாக கூறி கைது செய்யப்பட்டார்.

நிரபராதி

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஆரம்பம் முதலே இவாவோ ஹகமடா மறுத்து வந்தார். ஆனால் காவல்துறையின் விசாரணை அடிப்படையில் 1968 செப்டம்பர் 11 ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. 

iwao hakamada with sister Hideko

ஆனால் அவரது அக்கா தனது தம்பி அப்பாவி என்று தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். அவரது சட்டக்கறையில் உள்ள ரத்தம் இறந்தவர்களின் டிஎன்ஏ உடன் ஒத்துப்போகவில்லை என வாதிட்டனர். இதனையடுத்து 2014 ஆம் ஆண்டு மறு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

அப்போது சிறையில் இருந்து வெளியே வந்த இவாவோ ஹகமடா, அவரது 91 வயதான சகோதரி ஹிடெகோவின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். தற்போது நீதிமன்றம் இவாவோ ஹகமடா நிரபராதி என தீர்ப்பளித்துள்ளது. இவாவோ ஹகமடா உலகின் நீண்ட நாட்கள் சிறையில் இருந்த மரண தண்டனை கைதி ஆவார்.