பெரம்பூர்: சூட்கேஸில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆண் சடலம் - முதல்வர் விஜய் தொகுதியில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான பெரம்பூர் ரயில் நிலையத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை ரயில் நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் நீல நிற சூட்கேஸ் ஒன்று யாரும் கவனிக்காத நிலையில் கிடந்தது.
அந்த சூட்கேஸிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதுடன், அதைச் சுற்றி அதிகளவில் ஈக்களும் மொய்த்திருந்தன. இதனால் சந்தேகமடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் தலை துண்டிக்கப்பட்டு, உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது.
மேலும், சடலம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, சூட்கேஸிலிருந்து விரல் ரேகைகள் உள்ளிட்ட முக்கிய தடயங்கள்சேகரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது, அந்த நபர் எங்கு கொலை செய்யப்பட்டார், கொலைக்குப் பிறகு உடல் ஏன் சூட்கேஸில் அடைத்து கொண்டு வரப்பட்டது, அதை வேறு இடத்துக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அனிகாவின் புகைப்படம்! அப்படியென்ன ஆடை அணிந்திருக்கிறார்? Manithan
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை IBC Tamil