ஆபாச செய்கை- 5 வயது சிறுமியின் புத்திசாலிதனத்தால் சிறைக்கு சென்ற 46 வயது நபர்!

United States of America Sexual harassment Crime World
By Jiyath Sep 06, 2023 02:36 PM GMT
Report

சிறுமியிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

ஆபாச செய்கை

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆர்லேண்டோ பகுதியில் சமர்செட் அபார்ட்மென்ட்ஸ் எனும் பெரும் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் மையப்பகுதியில் திறந்த வெளியில் பூங்கா ஒன்று உள்ளது.

ஆபாச செய்கை- 5 வயது சிறுமியின் புத்திசாலிதனத்தால் சிறைக்கு சென்ற 46 வயது நபர்! | Man Exposing Himself Video Recorded By 5 Year Old

இங்குள்ள ஒரு வீட்டில் தனது பாட்டியை பராமரித்தது கொள்வதற்காக கார்லோஸ் லூசியானோ என்ற 46 வயது ஆண் சென்றிருக்கிறார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் கண்ணாடி கதவின் வழியாக 5 வயது சிறுமி ஒருவர் லூசியானோவிற்கு தென்பட்டுள்ளார்.

அந்த சிறுமியை பார்த்து இந்த நபர் காற்றில் முத்தங்களை பறக்க விட்டுள்ளார். மேலும் தனது உடலை ஆபாசமாக வெளிப்படுத்தும் செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

சிறுமியின் புத்திசாலித்தனம்

உடனடியாக அந்த சிறுமி லூசியானோவிற்கு தெரியாமல் புத்திசாலித்தனமாக தனது சகோதரியின் மொபைல் போனில் இதனை வீடியோஎடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தயார் 911 என்ற அமெரிக்காவின் அவசர உதவிக்கான எண்ணை அழைத்து தகவல் கொடுத்துள்ளார்.

ஆபாச செய்கை- 5 வயது சிறுமியின் புத்திசாலிதனத்தால் சிறைக்கு சென்ற 46 வயது நபர்! | Man Exposing Himself Video Recorded By 5 Year Old

உடனடியாக அங்கு வந்த போலீசார் வீடியோவை பார்த்துவிட்டு, அதிலிருந்த லூசியானோவை கைது செய்தனர். இதனையடுத்து அவர் ஆரஞ்ச் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த 5-வயது சிறுமியின் புத்திசாலித்தனத்தை அங்குள்ள பலரும் பாராட்டி வருகின்றனர்.