“உயிரு முக்கியம் பாஸ்” - எமர்ஜென்சி ப்ரேக் அடித்து உயிரை காப்பற்றிய ரயில் ஓட்டுனர் ; குவியும் பாராட்டு

mumbai shivdi train pilot saves guy from train accident
By Swetha Subash Jan 04, 2022 10:56 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

தண்டவாளத்தில் படுத்த நபரை ரயில் ஓட்டுநர் தன்னுடைய துரித செயலால் காப்பாற்றிய வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

சமூகவலைதளங்களில் சில வீடியோக்கள் வைரலாவது வழக்கம். குறிப்பாக ரயில் தொடர்பான வீடியோ என்றால் சமூகவலைதளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

அந்தவகையில் தற்போது பதைபதைக்க வைக்கும் ரயில் வீடியோ ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

அதன்படி அந்த வீடியோவில் ஒரு நபர் வந்து தண்டவாளத்தில் நடந்து செல்வது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதன்பின்னர் அவர் திடீரென்று தண்டவாளத்தில் படுத்து கொண்டுள்ளார்.

அந்த சமயம் பார்த்து அந்த தண்டவாளத்தில் பயணிகள் ரயில் ஒன்று வந்துள்ளது. நல்வாய்ப்பாக தண்டவாளத்தில் ஒரு நபர் படுத்திருப்பதை பார்த்த ரயில் ஓட்டுநர் அவசரமாக பிரேக் அடித்து அந்த நபர் மீது ரயில் ஏறாமல் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே காவல்துறையினர் அந்த நபரை வந்து தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த சம்பவம் மும்பையின் சிவ்டி புறநகர் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து உள்ளனர்.

அத்துடன் பலரும் இந்த வீடியோ தொடர்பாக தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் அனைவரும் இந்த ரயில் ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர்.