"BRUSH-க்கு பதிலாக CHOCOLATE" முதல்வர் படத்தை வரைந்து அசத்திய ஆசிரியர்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வருங்கால பிரதமராக வர வேண்டி பிரஷ்க்கு பதிலாக 'சாக்லட்டாலேயே" முதல்வர் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் சாக்லேட்டாலேயே முதல்வர் ஸ்டாலின் அவர்களின் படத்தை வரைந்தார்.
ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில்:- தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அரபு நாட்டு பயணம் அடுத்த இந்திய பிரதமரின் முதல் பயணம் அவருடைய பயணத்தை பார்க்கும்போது, கேட்கும்போதும், பேசும்போதும் இனிமையாக இருக்கிறது.
அதனால் தான் பிரஷ்க்கு பதிலாக தித்திக்கும் "சாக்லேட்டாலேயே " வருங்கால பிரதமர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வரவேண்டும் என்பதை விரும்பும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் படத்தை 20 நிமிடங்களில் வரைந்தேன் என்றார்.
ஊர் பொதுமக்கள் சாக்லேட் கொண்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களின் படத்தை வரைந்த பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.