மனைவி செய்த செயல்; நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த கணவன் - நடந்த கொடூரம்!
மனைவி சென்னைக்கு சென்ற நிலையில் கணவர் நண்பர்களை அழைத்து விருந்து வைத்துள்ளார்.
மது விருந்து
குமரி, அமராவதி பகுதியை சேர்ந்தவர் மகேஷ்(38). வெளிநாட்டில் எலக்ட்ரீசனாக வேலை செய்து வந்தார். ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட நிலையில், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு சென்னையை சேர்ந்த ஷோபி (38) என்ற பெண்ணை மகேஷ் 2வதாக திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து, மனைவி ஷோபியோடு தக்கலையில் உள்ள வீட்டில் மாடியில் வசித்து வந்துள்ளனர்.
கணவன் பலி
இந்நிலையில், ஷோபி மட்டும் பெற்றோரை பார்த்துவிட்டு வருவதற்காக சென்னை சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்க்கையில், ரத்த காயங்களுடன் மகேஷ் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். உடனே மனைவி தகவலின் பேரில் விரைந்த போலீஸார் மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர் விசாரணையில், மனைவி சென்னைக்கு சென்றதும் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து குடித்துள்ளார். நண்பர்களுடன் ஒன்றாக குடித்துக்கொண்டிருந்த போது, திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இதில், மகேஷை அவரது நண்பர்கள் குத்தி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.