நள்ளிரவில் காணாமல்போன இளைஞர்... நரபலி கொடுக்கப்பட்டாரா?

தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள உப்புறப்பள்ளி கிராமத்தில் சதீஸ் என்ற 28 வயது இளைஞர் வழக்கம் போல நேற்று இரவு அவர் வீட்டின் முன் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இன்று காலை திடீரென அவர் மாயமாகி விட்டார். அவர் படுத்திருந்த இடத்தில் நரபலி கொடுப்பதற்காக வைக்கப்படும் உருவ பொம்மைகள், கோலம், ஆகியவை இருந்தது. இதனால் சதீஷை மந்திரவாதிகள் யாரும் கடத்தி சென்றுவிட்டனரா என்ற பீதி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அவரது பெற்றோர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனதாகவும், அவரை போலீசார் பல இடங்களில் தேடியும் இன்றுவரை அவர் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து இளைஞர்கள் திடீரென மாயமாகி போவது தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்த வீடியோவை காண:ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்