மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்; விபத்தில் பலி - தவிக்கும் குழந்தை
மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி இறந்த செய்தி
உத்தர பிரதேசம், ராமுபூர் ரகுவீர் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் (28). பஞ்சாபில் கூலி வேலை செய்து வந்துள்ளார். பூஜா என்ற பெண்ணை ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், வெளியூரில் பணிபுரிந்த சஞ்சய், தனது மனைவி இறந்த செய்தியைக் கேட்டு, தனது தம்பி ரிங்குவுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு அவசரமாகப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
விபத்தில் கணவன் பலி
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சஞ்சய் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் மற்றும் அவரது மனைவியின் இறுதிச் சடங்குகள் ஒன்றாக நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், விபத்துக்குள்ளான வாகனத்தை அடையாளம் காணும் தேடலில் இறங்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.