பொதுமக்கள் உஷார்...ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து இளைஞர் பலி..

Rajasthan bluetoothearphoneexplode
By Petchi Avudaiappan Aug 07, 2021 07:50 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

 ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ளூடூத் ஹெட்போன் வெடித்து 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள சோமு நகரம் உதைப்புரியா என்ற கிராமத்தில் வசித்து வந்த ராகேஷ் குமார் நகார் என்ற 28 வயது இளைஞர் போட்டி தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார்.

அதனால் இவர் அடிக்கடி செல்போனை பயன்படுத்தும் போது ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனிடையே நேற்று வழக்கம்போல் ப்ளூடூத் ஹெட்போன் பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது ப்ளூடூத்தில் மின்சாரம் பாய்ந்து வெடித்தது.

இதில் ராகேஷ் குமாரின் காதுப்பகுதியில் பலத்த காயம் அடைந்ததால் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராகேஷ் குமார் நகார் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெட்போன் வெடித்தபோது மயங்கி விழுந்ததில் இளைஞருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஹெட்போன் பயன்படுத்துபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.