கார் மோதியதில் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நபர் - கடைசியில் நிகழ்ந்த சோக சம்பவம்
பெங்களூரில் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் பனசங்கரி அருகே வெளிவட்ட சாலையில் 4 பேர் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக எதிரே வந்த கார் சென்று கொண்டிருந்த அந்த நபர்கள் மீது மோதியது. அதுமட்டுமல்லாமல் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு கார் மீதும் மோதி நின்றது.
இதில் கார் மோதிய வேகத்தில் 4 பேரில் ஒருவர் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்ற மூன்று பேரும் படுகாயம் அடைந்த நிலையில் மீட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பனசங்கரி போலீசார் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்ததில் அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிய வந்தது. இதுகுறித்து பனசங்கரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விபத்து ஏற்படுத்திய இடத்தில் இருந்த ஒரு கடையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.