அதிர்ச்சி! வனத்துறை துப்பாக்கிச்சூடு; 55வயது முதியவர் பலி - கதறி அழும் உறவினர்கள்!
தேனியில் வனத்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 55 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு
தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் அததுமீறி நுழைந்ததாக ஈஸ்வரன் (55) என்பர் மீது வனத்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் அவர் உயிரிழந்ததாக வனத்துறை தெரிவித்துள்ளனர்.
காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்த ஈஸ்வரனை வனத்துறையினர் பிடிக்க முயன்றபோது பதிலுக்கு அவர் தாக்கினார் என வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதனையடுத்து கத்தியால் தாக்கவந்த ஈஸ்வரனை பாதுகாப்பு கருதி வனவர் திருமுகன் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானதாக" வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறவினர்கள் குற்றச்சாட்டு
இந்நிலையில் ஈஸ்வரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் "இரவில் வயலில் காவலுக்கு சென்ற ஈஸ்வரனை வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாக உறவினர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை அருகே குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.