வாக்குசாவடி அலுவலர் மாரடைப்பால் திடீர் மரணம்

By Fathima Oct 09, 2021 04:40 AM GMT
Report

விழுப்புரத்தின் வீடூர் வாக்குசாவடி அலுவலர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்காக ஊரக உள்ளாட்சி தேர்தலின் 2ம் கட்ட வாக்குபதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது.

காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் வீடூர் அரசுப்பள்ளி வாக்குச்சாவடியில் தங்கியிருந்த வாக்குச்சாவடி அலுவலர் மாணிக்க வாசகம் (55) இன்று அதிகாலையில் மாரடைப்பால் இறந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த இவர், விழுப்புரம் இ.எஸ்.கார்டனில் குடியிருந்தார்.

இவர் வா.பகண்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை பொருளாதார பட்டதாரி ஆசிரியர் ஆக பணியாற்றி வந்தார்.

ரத்த அழுத்த மாத்திரை எடுத்து வராததால் வெள்ளிக்கிழமை இரவு இவர் பதற்றமாக இருந்ததாக சக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலையில் மயங்கி கிடந்த மாணிக்க வாசகம் என்பவரை, சக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

எனினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.