கறிக்குழம்பு சமைத்து தராத மனைவி - கணவர் செய்த விபரீத காரியம்

mancomplainagainstwife Telanganapolice
By Petchi Avudaiappan Mar 20, 2022 10:43 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

தெலங்கானாவில் கறிக்குழம்பு சமைத்து தராத மனைவி குறித்து காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு போன் போட்டு கணவன் புகாரளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானாவின் கனகல் மண்டலத்தில் உள்ள சேரலா கௌராரம் கிராமத்தை சேர்ந்த நவீன்  என்ற நபர் கடந்த வெள்ளிக்கிழமையன்று இரவு ஆட்டிறைச்சியுடன் வீடு திரும்பியுள்ளார்.அதனை கறிக்குழம்பாக சமைத்து கொடுக்கும்படி தனது மனைவியிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் குடிபோதையில் வந்த நவீன் மீது அதிருப்தியில் இருந்த அவரது மனைவி அதனை சமைத்து கொடுக்க முடியாது என்று மறுத்துள்ளார்.  

இதனால் கடுப்பான போதையில் இருந்த நவீன் தனக்கு கறிக்குழம்பு வைத்து கொடுக்காத மனைவி மீது போலீசில் புகார் செய்ய நினைத்தார். அதற்காக தனது செல்போனில் இருந்து 100க்கு டயல் செய்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்த அவர், மனைவி குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

முதலில் நவீனின் பேச்சை கேட்ட காவலர்கள் யாரோ பிராங்க் செய்கிறார் என்று பெரிதாக அதனை எடுத்துக்கொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் தொடர்ந்து 6 முறை அழைப்பு விடுத்த அவருக்கு பாடம் புகட்ட நினைத்த காவல் துறையினர் இரவு நேரத்தில் செல்போன் எண் மூலம் வீட்டை கண்டுபிடித்து சென்றுள்ளனர். 

ஆனால் நவீன் குடிபோதையில் இருப்பதை கண்ட போலீசார் அவரை எதுவும் சொல்லாமல் சென்று விட்டனர். மறுநாள் சனிக்கிழமை வழக்கம்போல போதை தெளிந்த அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. விரைந்து வந்து காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அங்கு நவீன் மீது பிரிவு 290 மற்றும் 510 இன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.