கொரோனாவில் உயிரிழந்த நபர் மீண்டும் உயிரோடு வந்ததால் பேய் என நினைத்து குடும்பத்தினர் தெறித்து ஓடியதால் பரபரப்பு
கொரோனா தொற்றால் உயிரிழந்த நபர் தற்போது மீண்டும் உயிரோடு வந்தததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர் உயிரோடு வந்த அதிசயம்
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.
பின்னர் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உயிரிழப்புகள் கட்டுக்கொள் கொண்டு வரப்பட்டது.

இருந்த போதும் தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸ் திரிபு உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா தாக்கம் என்பது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் தாக்குதலுக்குள்ளான கொரோனா 2வது அலையின் போது அதில் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டும் உயிரோடு வந்திருப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர் உயிரோடு வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சி
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கமலேஷ் படிதார். 35 வயதான இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையின் போது, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டதாகவும், அவரது இறுதிச் சடங்கை தாங்களே செய்துவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஊடகங்கள் சில அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளது. இதில் எது உண்மை என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் (ஏப்ரல் 15) தன்னுடைய வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவர் தனது வீட்டின் கதவை தட்டியுள்ளார். அதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் பேய் என நினைத்து கூச்சலிட்டவாரு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர். பின்னர் தன் குடும்பத்தினருடன் தற்போது கமலேஷ் படிதார் மகிழ்ச்சியோடு இருந்து வருகிறார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், தாம் ஒரு கும்பலுடன் இருந்ததாகவும், அவர்கள் தினம் தமக்கு போதை ஊசி செலுத்தியதாக கூறிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.