உயிரிழந்த தந்தை..ஆம்புலன்ஸில் மகன் சொன்ன வார்த்தை - அரங்கேறிய திகிலூட்டும் சம்பவம்!
இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்த சம்பவம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கர்நாடகா
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் ஸ்டேஷனரி கடை நடத்தி வருபவர் 45 வயதான பிஷ்டப்பா குடிமணி. இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். பிஷ்டப்பாவிற்கு காமாலை நோய் பாதிப்பு இருந்துள்ளது.
இதனால் சில ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நிலை மிகவும் மோசமானதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதனை கேட்டு அவரது மனைவி மற்றும் அவரது மகன்கள் கதறி அழுதனர்.அதன்பிறகு பிஷ்டப்பா இறந்ததாக உறவினர்களுக்கும் ஊர் மக்களுக்கும் அறிவித்தனர். இதனையடுத்து பிஷ்டப்பாவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி வீட்டுக்கு எடுத்துச் சென்றனர்.
உயிர் பிழைத்த சம்பவம்
அப்போது இளைய மகன், அப்பா நீங்கள் விரும்பி சாப்பிடும் தாபா ஹோட்டல் வந்துவிட்டது எழுந்திருங்கள் எனக் கூறி அழுதுள்ளார்.இதைக் கேட்ட பிஷ்டப்பா, ஹா... என்று கூறி மூச்சை இழுத்து விட்டார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் உயிர் பிழைத்த சம்பவம் கர்நாடகாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.